போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய்…!

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டியிட்ட முதல் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்சியமைக்க 117 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெக 107, திமுக 75, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பெர்ம்பூர் தொகுதியில் 44,928 வாக்குகள் வித்தியாசத்திலும் திருச்சி கிழக்கு தொகுதியில் 26,000 வாக்குகள் வித்தியாசத்திலும் விஜய் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளின் படி ஒருவர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினராக இருக்க முடியாது. அவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். இதனால் பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு ஆகிய இரண்டில் எந்த தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.