தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து…!

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் தவெகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். தவெக-வின் சிறப்பான செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். 

அதே போல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  இன்று மாலை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர்களிடம் பேசினார். மேலும், தவெக தலைவர் விஜய் அவர்களைத் தொடர்புகொண்டு, அவரது கட்சியின் செயல்பாடுகளுக்காகப் பாராட்டுகளையும் தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.