பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் நன்றி…!

தவெக தலைவர் விஜய், தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தளுக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. இதனால் தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் மற்றும் பாமகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக, அக்கட்சியின் தலைவர் விஜய் ஆகியோருக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும்  ராகுல் காந்தி ஆகியோருக்கு தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

மக்களவையின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அழைப்பிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! நாங்கள் பொதுச் சேவையில் சிறந்து விளங்குவதற்கும், கூட்டு ஒத்துழைப்பு தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நலனே எங்களின் ஒரே குறிக்கோளாகும். அரசியலைக் கடந்து, மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழக மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.