“பேச்சுக்கே இடமில்லை”- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி…!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டமன்றத் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 207 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திருணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில்  சுமார் 15 ஆண்டுகளாக  நடைபெற்று வரும் திருணாமூல் காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது;  நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்.தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற தலைவர்கள் என்னிடம் பேசினார்கள். இப்போது என் இலக்கு தெளிவாக உள்ளது. நான் ஒரு சுதந்திரப் பறவை. நான் என்ன செய்வேன் என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.