சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து விஜய் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரச்சரத்தை தொடங்கினார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:
கேஸ் தட்டுப்பாடால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. டீ கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. அவங்களும் (மத்திய அரசு) இவங்களும் (மாநில அரசு) கொஞ்சம் உஷாரா இருந்திருந்த கேஸ் பிரச்னை கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதைப்பற்றி கேட்டால் அதற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவார். ஆனால் அவர் குடும்பத்தில் யாருக்காவது பிரச்சனை என்றால் டெல்லிக்க் பறந்து செல்வார். இந்த கேஸ் சிலிண்டர் பிரச்னைக்காவும் அவர் டெல்லிக்கு சென்று வரக்கூடாதா…?
கேஸ் மானியம், வேலைவாய்ப்பு, நீட் ரத்து இவை அனைத்தும் என்னாச்சு? இப்போது அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் ரெடியாகி விட்டார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் மு.க.ஸ்டாலினின் வேலை. திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார், நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி உள்ளார். நகராட்சி துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றி உள்ளார் ஒரு அமைச்சர்.
தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் தான் எங்கள் கவனம் இருக்கும்” என்றார்.
பிரச்சாரத்தின் நடுவே தவெக தலைவர் விஜய், அண்மையில் வெளியிடப்பட்ட தவெகவின் தேர்தல் பிரச்சார பாடலான விசில் அடிக்க ரெடியா என்ற பாடலையும் பாடினார்.







