நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், லயன் கிங், கிளாடியேட்டர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து பணியாற்றுகின்றனர். மேலும் இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கப்பூர் நடிக்கும் ‘ராமர்’ கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Rama is the greatest of all time because he lived a life where the choices he made were always in the benefit of the greater good, duty over desire, and sacrifice over self.
His legacy continues to enhance and empower humanity over time and bring the belief in the goodness of… pic.twitter.com/pMGMhb7RIH
— The World Of Ramayana (@WorldOfRamayana) April 2, 2026







