GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கேற்ப தங்கம் விலையானது மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே காந்த 2ம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. பின்னர் மாலையில் கூடுதலாக கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,850-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.