தமிழ் நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைத்துள்ளது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மே – 10 ஆம் தேதி பதவியேற்றார்.
இந்த நிலையில் தவெக அரசின் முதல் நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். அதன் படி தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் ஆகிறது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.




