தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம் – ஆளுநருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்…!

பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. ​

முன்பு ஆர்.என்.ரவி அவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதை போல, இப்போது புதிய ஆளுநரும் அதே வேலையைத் தொடர்கிறார்.

மதுரை சர்க்யூட் ஹவுஸில் அதிகாரிகளை அழைத்து ‘ஆய்வுக் கூட்டம்’ நடத்த முயன்றது, இப்போது கல்வித் கொள்கையை திணிக்கப் பார்ப்பது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. ​

நீட் (#NEET), இந்தி திணிப்பு, இப்போது NEP என பாஜகவும் அதன் ஆளுநர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும், டெல்லி அல்ல!” என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.