அதிமுக மாநிலங்களைவை எம்.பி.யாக இருந்த சி.வி. சண்முகம் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தமிழ் நாட்டில் ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. ஜூன் 8ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி கடைசி நாளாகும்.
இதையடுத்து போட்டியிருந்தால், ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று, அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
இந்த சூழலில் தமிழ் நாட்டில் ஆளும் கட்சியான தவெக சார்பில் மாநிலங்களைவை பதவிக்கான தேர்தலில் யார் நிறுத்தப்படுவார்…? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் தவெக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கியுள்ளது.








