தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழ் நாட்டின் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி செங்கல்பட்டு, கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




