தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது என்று…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்,

புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழிந்த கழிவு நீர் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்ற கோரி புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அண்மைச் செய்தி: வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் பிக்கிலி!…

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேங்கைவயல் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் கூறியதாவது:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது.

எந்த விசாரணை அமைப்புகளுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மக்களும் இச்சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள். தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால் தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வேங்கைவயல் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.