இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் பிக்கிலி வெளியானது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இதையும் படிக்க: பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பட வெளியீடு குறித்த அப்டேட் இருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டிருந்தார். பிச்சைக்காரன் 2 ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் பிக்கிலி வெளியாகியுள்ளது. இதனை, விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/vijayantony/status/1636676337657339905?t=A1qozgrRFPmfZHbT4W5A1A&s=08
-ம.பவித்ரா







