அமமுக பொதுச்செயலாளராக மீண்டும் #TTVDhinakaran தேர்வு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து அமமுக தேர்தலை சந்தித்தது. இந்த சூழலில், கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது.

இதையும் படியுங்கள் : #Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!

இந்த நிலையில், தஞ்சாவூரில் அமமுகவின் 4-வது பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக டிடிவி தினகரனை மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.