இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலக்கதுறை முன்பு ஆஜராகியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமிஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தினகரன் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலக்கதுறை முன்பு இன்று ஆஜராகியுள்ளார்.







