“கோரிக்கைக் குரல்களை” ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வின் Fascist mentality-க்கான Proof – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…….!

உதவித்தொகை உயர்வு கோரி போராடி வரும் மாற்றுத் திறனாளிகளை கைது செய்துள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல் , சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஐ (எம்) மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , மு.க. ஸ்டாலின்தலைமையிலான  அரசு அனைத்து விதமான “கோரிக்கைக் குரல்களை” ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof.

ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.