உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கற்கள் கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அனல் மின் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் முன்பு கவிழ்ந்து விபத்துள்ளாகியது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உடன்குடியில் 660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகளுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் கற்கள் கொண்டுவரப்படுகின்றன.
இந்த நிலையில் கூடங்குளத்திலிருந்து அனல் மின் நிலையத்திற்கு டிப்பர் லாரி மூலம் ராட்சத பாறை கற்களை கொண்டுவரப்பட்ட லாரி அனல் மின் நிலையம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் எதிர்திசையில் உள்ள பெட்ரோல் பங்க் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் லாரியில் பாறைக்கற்கள் சாலையில் விழுந்து சிதறியது. பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்து (43) அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
—அனகா காளமேகன்