முக்கியச் செய்திகள் தமிழகம்

பாக்கு தோப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்!

மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் பாக்கு தோப்பில் நுழைந்த காட்டு
யானைகள் கூட்டம் 100க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பகுதியில் சமீப காலமாகவே
காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் கல்லார் பகுதியில் உள்ள வாழை, பாக்கு, தென்னை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில் இன்று அதிகாலை கல்லார் பகுதியில் கோவர்த்தனன் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பு உள்ளது. இவர் சுமார் இரண்டாயிரம் பாக்கு மரங்கள் பயிர்செய்துள்ள நிலையில் இன்று அதிகாலை இவரது தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம், அங்கு பயிரிட்டு அறுவடை செய்து வந்த 100க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக வளர்த்து வந்த பாக்கு மரங்களை ஒரே நாளில் காட்டுயானைகள்
நாசப்படுத்தியதால் இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், இதற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வெளியேறும் யானைகளை கண்கானித்து வனத்தினுள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எங்கள் பக்கத்திலிருந்து வரும் செய்திகள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது – விஜய் மக்கள் இயக்கம்

Vel Prasanth

காவல்துறை உயர் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வு

Halley Karthik

வேட்டையாடு விளையாடு-2 பாகம் குறித்த புதிய அப்டேட்

Web Editor