மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் திரிஷா!

தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத…

தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

தற்போது லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே 2006-ல் வெளியான ஸ்டாலின் படத்தில் சேர்ந்து நடித்து இருந்தனர்.

இந்த படம் தந்தை, மகன் உறவை பற்றிய படமாக தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தயாரிக்கிறார். திரிஷா மற்றும் சிரஞ்சீவி இருவரும் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறீப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.