இந்தியா

திரிபுரா தேர்தல்; முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதேபோல் நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த 27ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திரிபுராவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இதேபோல் நாகாலாந்து மாநிலத்திலும் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் வரியை குறைப்பது குறித்து பி.டி.ஆர் பதில்!

Gayathri Venkatesan

ஊழல் மோசடி புகார்; காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

Saravana

இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

Jayakarthi