இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை ஒதுக்கிய திரிணாமுல்; பாஜக குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தியதால் அக்கட்சியை இந்தியாவிற்கு எதிரான கட்சி என பாஜகவினர் குற்றம்சாட்டி விருகின்றனர். மேற்கு வங்கத்தில் 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில்…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தியதால் அக்கட்சியை இந்தியாவிற்கு எதிரான கட்சி என பாஜகவினர் குற்றம்சாட்டி விருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மக்களின் பெருத்த ஆதரவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை நடத்தி வருகிறது .இக்கட்சியின் கொள்கைகளையும், முக்கிய செய்திகளையும் கிராமப்புற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதில் ஜாகோ பங்களா நாளிதழ் முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் தொடங்கப்பட்ட ஆண்டே 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாசகர்களை கொண்டிருந்தது.

தொடங்கப்பட்ட ஆண்டு முதல் தினசரி நாளிதழாக வெளிவந்த இந்த பத்திரிகை ஜூலை 2021 முதல் வாரப் பத்திரிகையாக மாற்றமடைந்தது. இந்நிலையில் நேற்று வெளிவந்த அந்த பத்திரிகையின் செய்தி ஒன்றில் ஜம்மு & காஷ்மீர் பகுதி இல்லாத இந்திய வரைபடத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு பாஜக தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு எதிரான கட்சி எனவும் அக்கட்சியை பாஜக நிர்வாகிகள் சாடிவருகின்றனர்.

 

இது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோசு கூறுகையில், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்பற்றாததால் அக்கட்ச்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டோம். மேலும் இந்த பத்திரிகை நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து பேசிய பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.