திருச்சி சிவா மகன் சூர்யா கைது; பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

திருச்சி சிவா மகன் சூர்யாவை ஜோடனை வழக்கில் கைது செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜூன்11 ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும்…

திருச்சி சிவா மகன் சூர்யாவை ஜோடனை வழக்கில் கைது செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஜூன்11 ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க. பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சூர்யாவின் கார் சேதமடைந்தது. இதனால், தன் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க. பிரமுகர் சூர்யா சிவா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகப் பேருந்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை கண்டோன்மென்ட் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல. அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூரியா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது பாஜக. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.. எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.. என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.