முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியுடன் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் சந்திப்பு

குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 21ம் தேதி அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் திரௌபதி முர்மு நாளை பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்று டெல்லி வந்தடைந்த முர்மு, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “திரௌபதி முா்முவை சந்தித்தேன், அவர் குடியரசு தலைவர் வேட்பாளராக தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது. அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!

Ezhilarasan

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

Saravana

இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

Arivazhagan CM