முக்கியச் செய்திகள் சினிமா

சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மரக்கன்று ஒன்றை நட்டு இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மனக்கன்று நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றும் படம் ஒன்றை தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அதிக மரக்கன்றுகளை நட உறுதியேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ’இயற்கையுடன் இணைந்த வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை நமக்குத் தருவதைப் போற்ற வேண்டும். எதிர்கால சந்ததிக்காக நமது புமியை பசுமையான இடமாக மாற்றுவோம். இந்த செயல் எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. நாம் அனைவரும் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பூமியை பாதுகாக்க நாம் ஒன்றிணந்து செயல்படுவோம்’ என்று தனது இஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார்.

இதுபோல் கடந்த ஆண்டு சமந்தாவும் அவரது மாமனார் நாகார்ஜுனாவும் இணைந்து மரம் நடும் சவாலை முன்னெடுத்தனர். இந்த சவாலை ஏற்று, நடிகை கீர்த்தி சுரேஷ், ராஸ்மிகா உள்ளிட்ட திரையுலகினர் மரக் கன்று நட்டனர்.

Advertisement:

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: நடராஜனுக்கு வாய்ப்பு!

Jeba

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு!

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

Vandhana