திருச்சி துறையூரில் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43) . துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து
வந்த இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார்.
அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் சென்று வந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று 16
வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை நாடி உள்ளனர். மேலும் மாவட்ட
குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் தேவி மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
———ரெ.வீரம்மாதேவி







