திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள 1.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை திருச்சி…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்புள்ள 1.73 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ஆண் பயணிகள் இருவர் தங்கள் உடைமை மற்றும் உடலில் ரூ 1.13 கோடி மதிப்புடைய 1.73 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது . இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சார்ஜா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை சோதனை செய்த போது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்தாவது முறையாக கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.