திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் தொல்லை வழக்கு: சமூக நல அலுவலகம் விசாரணை

திருச்சியில் மாணவிகளுக்கு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. திருச்சி புத்தூர் பகுதியில் உள்ளது பிஷப்…

திருச்சியில் மாணவிகளுக்கு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ளது பிஷப் ஹீபர் கல்லூரி. இந்த கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகள், தங்கள் துறையின் தலைவர் பால் சந்திரமோகன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நல அலுவலகம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவிகளின் புகாரின் எதிரொலியாக அக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் நளினி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சமூக நல அலுவலர் விசாரணையை தொடங்கி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.