கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், 1 சாந்தன் பாறை ஆகிய பகுதிகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேஷன் கடைகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 10 பேரை கொன்ற யானையைப் பிடித்து பரம்பிக்குளம் பகுதியில் விடுவதற்கான 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அதைக் கண்டிக்கும் விதமாக பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரம்பிக்குளம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள்
600 குடும்பங்கள் மற்றும் 2500 மக்கள் வசித்து வரும் நிலையில் அரிகொம்பனை பிடித்து இப்பகுதியில் விட்டால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும்
பொதுமக்களும் அச்சுறுத்தலாக இருக்கும்.
மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். அதை இடிப்பதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்தோடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே அாிக்கொம்பனை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்ற நிபுணர் குழுவின் முடிவை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்.







