முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

நோயாளிகள் மருந்துகளை எளிதாக பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் போன்ற தானியங்கி முறையில் மருந்து அளிக்கும் இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது

அரசு அலுவலகங்களில் கணினிமயமாக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அனைத்து நிலையிலும் தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பெறுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வரும் நிலையில் அதனை களையும் வகையிலும், எளிதாக மருந்தினை பெறும் வகையிலும் ADVM (Automatic Drug Vending Machine) என்ற தானியங்கி மருந்து தரும் இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த தானியங்கி மருந்து தரும் இயந்திரங்கள் வரும் அக்டோபர் மாதம் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்படவுள்ளது.

ADVM மூலம் எப்படி மருந்து பெறலாம்?

நோயாளி மருத்துவரிடம் சென்று பரிசோதித்த பின் மருத்துவர் செயலி அல்லது இணையவழியில் மருந்துகளை பரிந்துரைப்பார்.

மருந்துகள் குறித்த தகவல் இணைய கட்டுப்பாட்டு இயந்திரம் மூலம் பார் கோட் அல்லது ஒருமுறை பயன்படுத்தத்தக்க ரக்சிய எண்ணாக நோயாளியின் அலைபேசிக்கு கிடைக்கும்

நோயாளி தன்னிடம் உள்ள பார்கோடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரம் வாசிப்பதற்கு ஏற்றவாறு அதன் முன்பாக காண்பிக்க வேண்டும் அல்லது தன்னிடம் உள்ள ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்

மாத்திரை, மருந்துகள் எவ்வளவு குறிப்பிடப்பட்டுள்ளதோ அதனை தானியங்கி மருந்து இயந்திரம் நோயாளிக்கு அளிக்கும். அளிக்கப்பட்ட மருந்துகள் விபரம் நோயாளிக்கும், மருந்தாளுநருக்கும் அலைபேசி வாயிலாக அளிக்கப்படும்

தானியங்கி மருந்து தரும் இயந்திரத்தில் உள்ள வசதிகள்

மாத்திரைகள், மருந்துகள், கிரீம்களை தனித்தனியாக பெற முடியும். 8-15 அடுக்குகள் கொண்ட இயந்திரத்தில் உள்ள 80-225 வகையான மருந்துகளை இருப்பு வைக்கும் வசதி உள்ளது. மருந்துகளின் இருப்பு குறித்த தகவலை மருந்தாளுநர் பெற முடியும். கடந்த 2020ஆம் ஆண்டு கோவையில் தனியார் நிறுவனம் ஒன்று முதலுதவி மருந்து தரும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து பெரிய அளவிலான செயல்பாடுகள் இல்லாத சூழலில் அரசு அதனை முன் மாதிரி திட்டமாக செயல்படுத்தவுள்ளது. எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடும் நிலையில், அவர்களுக்கான மருந்துகள் தங்கு தடையின்றி எளிதாக கிடைக்க இந்த தானியங்கி மருந்து தரும் இயந்திரம் பேருதவியாகவே இருக்கும்.

 

கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

Advertisement:
SHARE

Related posts

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்!

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Saravana Kumar

‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

Ezhilarasan