தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் பூவலிங்கம் என்பவர் சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பழங்குடியின மாணவன் பூவலிங்கம் 12-ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள் பெற்று கல்லூரி பயில சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். மாணவன் பூகாலிங்கத்திற்கு சாதி சான்றிதழ் தர கோவில்பட்டி கோட்டாட்சியர் கொடிவழி சான்று வழங்கிய போதும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் மறுப்பதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் சாதிச் சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்த பின்னரும் கோட்டாட்சியர் வழங்க மறுத்து அலைகழித்து வருவதாக மாணவன் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 3- நாட்களாக காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், திருச்செந்தூர் கோட்டாட்சியர் வேண்டுமென்றே காத்திருக்க வைத்து அழைக்கழிப்பதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சட்டகல்லூரியில் விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் பழங்குடியின மாணவன் பூவலிங்கம் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பதாகவும் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சாதிச்சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மாணவன் பூவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விசிகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.