தமிழ்நாடு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் இன்று இரவு சென்னை விமான நிலையம் வருகை தந்தார். இதனையடுத்து கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாளை காலை 11 மணி வரை தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா, பின்னர் கோவிலம்பாக்கம் சென்று பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அமித்ஷா இறுதி செய்ய உள்ளதாகவும், கோவை, நீலகிரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் அதில் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின், வேலூர் பள்ளிக்கொண்டாவில் நடைபெறும் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித்ஷா சிறப்புரை ஆற்றுகிறார்.
பாஜக நிர்வாகிகளை மட்டுமே சந்திக்க உள்ளதால் அமித்ஷா முடிவு செய்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க மாட்டார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார் அவரை வரவேற்க தொண்டர்கள் காத்திருந்த நிலையில் மின்தடை ஏற்பட்டதால் பாஜக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நடிகர்கள் விஷால், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 24 பிரபலங்கள் சந்திக்க உள்ளனர்; பாஜக சார்பில் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.