“ஸ்பெஷல் நன்றி #Ajithey” – வாழ்த்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை உலகளவில் உயர்த்தும் நடிகர் அஜித்குமாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்தார். தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் தீவிர ஆர்வமுடையவர். இந்நிலையில், 15…

TRBRajaa ,Minister,TNGovt ,DMK ,AjithKumar ,AjithKumarRacing ,AK ,Race ,Dubai

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை உலகளவில் உயர்த்தும் நடிகர் அஜித்குமாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்தார்.

தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் தீவிர ஆர்வமுடையவர். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார். இதன்படி துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அஜித்குமார் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் தனியாக ஒரு அணியை நிர்வகித்து வரும் நடிகர் அஜித்குமார் அந்த அணி சார்பில் Fabian Duffieuxwill-ஐ அதிகாரப்பூர்வ ஓட்டுநராக அறிவித்தார். இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருக்கும் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தீபாவளி தீப உற்சவம் | 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் #Ayodhya ராமர் கோயில்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உலகளவில் செல்கிறது. இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் நன்றி”

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.