உளுந்தூர்பேட்டை அருகே, அரசு விரைவு பேருந்து இஞ்சின் பழுதாகி பாதி வழியில் நிறுத்தம் செய்யப்பட்டதால், மாற்று பேருந்து இல்லாமல் பயணிகள் அவதியடைந்தனர்.
திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து ஒன்று
சென்னைக்கு சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றபோது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் பேருந்து இயக்க முடியாமல் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து, பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்படாததால் பெரும் அவதியடைந்தனர்.
பின்னா், சில பயணிகள் ஆட்டோ மூலம் உளுந்தூர்பேட்டை வந்து வேறு பேருந்துகளில் சென்னை சென்றனர். இதுகுறித்து ஒட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்ட போது இந்த பேருந்து FC தகுதி சான்று பெற்று ஒரு வாரமே ஆகிறது என தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் அருகில் வந்த போது பெய்த மழையினால் மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகியதால் பேருந்து இருக்கையில் அமர முடியாமல் அவதியடைந்தாக பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
ரூபி.காமராஜ்







