மூணாறு அருகே மீண்டும் உலா வரும் யானை கூட்டம்!

கேரளா மாநிலம், மூணாறு அருகே குடியிருப்பு, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், மீண்டும் யானைகள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு…

கேரளா மாநிலம், மூணாறு அருகே குடியிருப்பு, பள்ளி மற்றும் அரசு
அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில், மீண்டும் யானைகள் கூட்டமாக
உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு பகுதியில் இன்று
காலை, 3 யானைகள் கூட்டமாக குடியிருப்புகளுக்குள் உலா வந்தன. யானை
கூட்டமாக வருவதை கண்ட இந்த பகுதி மக்கள், வீடுகளில் உள்ளே பூட்டிக்
கொண்டு தஞ்சம் அடைந்தனர். இந்த பகுதியில் வந்த யானை, அங்குள்ள
விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும்
குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த
வனத்துறையினர் பயிற்சி பெற்ற யானை பாகன்கள் உதவியுடன்,
யானைகளை அந்த பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டும்
நடவடிக்கைகளை எடுத்தனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.