போக்குவரத்து ஊழியர்கள்; ஆகஸ்ட் 3ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்?

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை…

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்கக் கோரியும், ஓய்வூதியர்களின் ஓய்வூதிய உயர்வு அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கக் கோரி வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீசை சென்னை பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரைச் சந்தித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அளித்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரன், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து 36 மாதங்கள் ஆகுவதாகவும், அடுத்த புதிய ஒப்பந்தத்திற்கான நாட்களே நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசிடம் இந்நாள்வரை நடத்திய பேச்சு வார்த்தையில் நம்பிக்கைக்குரிய பதில் வரவில்லை எனக் கூறினார். மேலும், பெண்கள் சொல்லும் இலவச பயண பேருந்துகளில் போக்குவரத்து ஊழியர்களுக்கான பேட்டாக்கள் வஞ்சிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும், ஆண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால், ஊழியர்களுக்கான பேட்டா குறைந்து கொண்டே செல்வதாகவும் அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘“பகாசூரன்” படப்பிடிப்பு நிறைவு; செப்டம்பரில் வெளியாகும் எனத் தகவல்’

மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து நியாயம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், ஓய்வு பெற்ற தொழிலாளிகள் மிகவும் மோசமான முறையில் வெறும் கையோடு திருப்பி அனுப்பும் அவல நிலையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் இருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், போக்குவரத்துத் துறையில் மட்டும் தான் இந்த அவல நிலை நீடிக்கிறது எனத் தெரிவித்த அவர், வேலை நிறுத்தம் தேவை இல்லை என்ற அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், தீர்வு கிடைத்தால் பிரச்சனை இல்லை தீர்வு இல்லை என்றால் வேலை நிறுத்தம் நிச்சயம் நடக்கும் எனக் கூறினார்.

வேலைநிறுத்தம் தொடர்பாக இதர சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்த அவர், அனைத்து தொழிலாளிகளும் பாதிக்கப்படும் பிரச்சனை இது. திமுகவின் தொமுச தொழிலாளிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம் எனக் கூறிய அவர், போக்குவரத்துத் துறை என்பது உற்பத்தி நிறுவனம் கிடையாது. லாப நஷ்டத்தைப் போக்குவரத்துத் துறையில் பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.