“பகாசூரன்” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளதாகப் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மோகன் ஜியின் புதிய படத்திற்கு “பகாசூரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா கதாநாயகியாக தாராக்ஷி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்துப் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துவரும் சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இந்த படத்தின் மூலம் இயக்குநர் மோகன் ஜி- யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18- ஆம் தேதி சேலம் முத்துமலை முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், முழு படப்பிடிப்பும் நேற்று நிறைவு பெற்றது. இப்படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘நடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்பு’
இப்படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி தெரிவிக்கையில், இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். படத்தைப் பற்றியும் இந்த படத்தில் தாங்கள் நடித்த அனுபவத்தைப் பற்றியும், இயக்குநர் மோகன் ஜி யை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








