மகளின் உடலைப் பெற மாட்டோம் என ஸ்ரீ மதியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகப் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தியாளர் ரியாஸ், ஸ்ரீ மதியின் தாயார் செல்வியிடம் தொலைப்பேசி வாயிலாகப் பேசினார் அப்போது, பேசிய அவர், தனது மகளின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம், உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நாளை நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘“பகாசூரன்” படப்பிடிப்பு நிறைவு; செப்டம்பரில் வெளியாகும் எனத் தகவல்’
மேலும், போஸ்ட்மார்டம் நடக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பிய போது, நேட்டீஸ் எதுவும் வாங்கவில்லை எனத் தெரிவித்த அவர், மிகப்பெரிய மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார். மேலும், படித்த இளைஞர்கள் வெளியே வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், உண்மையை வெளிக்கொண்டு வர தங்களுடன் விவசாயிகள் தயாராக உள்ளதாகக் கூறினார்.








