தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, உள்துறைச்செயலாளராக பணீந்திர ரெட்டியும், வருவாய் நிர்வாக ஆணையராக எஸ்.கே.பிரபாகரும், தொழிலாளர் நலத்துச்செயலாளராக நசிமுதீனும், கூட்டுறவுத்துறைச்செயலாளராக ராதாகிருஷ்ணனும், நெடுஞ்சாலைகள் துறை செயலாளராக பிரதீப் யாதவ், வணிகவரித்துறைச்செயலாளராக தீரஜ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 2 ஆண்டுகளில் 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்துக்கு புதிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச்செயலாளராக ஆனந்தகுமாரும், ஊரக வளர்ச்சித்துறைச்செயலாளராக தரேஸ் அகமதுவும், புவியிய & சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘“எண்ணும் எழுத்தும்” திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’
https://twitter.com/news7tamil/status/1535944414044225539
அதேபோல, போக்குவரத்துத்துறை ஆணையராக நிர்மல்ராஜ், மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையாளராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப் குமாரும், தருமபுரி மாவட்ட ஆட்சியராகச் சாந்தியும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ், தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். டிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த பங்கஜ்குமார் பன்சால் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







