திருச்சி அருகே பொன்மலை ரயில் நிலைய மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை மாநில அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பந்தை அடித்து மகிழ்ச்சியுடன் விளையாடினார். மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும், கட்டணம் கட்டாத குழந்தைகளை வரகூடாது என கூறுவது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் கட்டாய முக கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் உறுதியான அறிவிப்புகளை தெரிவிக்கவில்லை. அதுபோன்ற அறிவிப்புகள் வந்தால் தெரிவிக்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் அதிக தொழிற்சாலைகளை எவ்வாறு கொண்டு வரலாம் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். நாளை முதல் சீருடை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவை குறைந்த பட்சம் 20 நாட்களுக்குள் கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
குழந்தைகளுக்கு மனதை ஒருமணபடுதும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
11 மற்றும் 12 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் பொழுது முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட்டு துவங்கப்படும்
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற பிறகு, தொழிற்துறையில் வளர்ச்சி கண்டுள்ளது தமிழ்நாடு. குறிப்பாக அந்நிய முதலீட்டில் 4-5 சதவீதம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. 60களிலேயே தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
இந்தியாவிலே தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மையாக உள்ளது. மக்கள் தொகையில் 6 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஆனால் உள்நாட்டு உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. ஏன் வெளிநாடுகள் இந்தியாவை பார்த்து பயப்படுகிறார்கள்?
நம்மிடம் உள்ள ஆயுதங்களை கண்டா? இல்லை, நமது இளைஞர்களை பார்த்து தான் பயப்படுகிறார்கள். நமது இளைஞர்களிடம் இருக்கின்ற அறிவு திறனை கொண்டு மற்ற நாடுகளை என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என எண்ணி அந்நிய நாடுகள் நம் இந்தியாவை கண்டு பயப்படுகிறார்கள்.
பொருளாதார வல்லுனர்கள் கொண்ட ஒரு குழுவை முதல் முறையாக தொடங்கிய அரசு இந்த ஆட்சியின் அரசு தான். பல்வேறு தொழில் முதலீடுகளை நமது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வரும் முனைப்பில் உள்ளார்.
சமீபத்தில் துபாய்க்கு சென்று வந்து 6000 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், 14000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும் என்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
-மணிகண்டன்








