உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணையவழியில் வரும் 30.06.2026 முதல் 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,
“தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை. அறிவியல், மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு (General Counselling) 30.06.2026 5 07.07.2026 வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள், நூலகர்கள். உடற்கல்வி இயக்குநர்கள் http://www.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




