சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி…

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்லிக்கு சென்றுள்ள தென்சென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது தொகுதிக்குட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவது தெடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவை கடந்த 27-ஆம் தேதி சந்தித்து‌, மனு அளித்தார்.

அந்த மனுவில், கிழக்கு கடற்கரை சாலை இரயில்வே திட்டம், பெருங்குடியிலிருந்து தொடங்கப்படாமல், தாம்பரத்திலிருந்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து ECR, ,OMR பகுதி மக்கள் அடைந்துள்ள கவலையைத் தெரிவித்து, அத்திட்டம் பெருங்குடியிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

வேளச்சேரி – புனித தோமையர் மலை MRTS பணிகளைத் துரிதப்படுத்தி, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் . மேலும், விரிவுபடுத்தும் பணிகள் முடியும் வரை ஏற்கனேவே பணிகள் முடிக்கப்பட்டுள்ள, சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரை MRTS ரயில் சேவை தொடங்கக் வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.