விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு, விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், விடுதலை படத்தின் முதல் பாடலான ’ஒன்னொடு நடந்தா’ பாடல் இன்று வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் சோனி சவுத் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அண்மை செய்திகள்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
விடுதலை படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிமாறன் விடுதலை படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பிரமாண்டமான சண்டைக் காட்சியைப் படமாக்கிவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சண்டைக் காட்சி விடுதலை முதல் பாகத்தின் க்ளைமாக்ஸாகவும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாகவும் அமையும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் தான் இரண்டாம் பாகத்தில் இடம்பெறவுள்ள புதிய கதாபாத்திரங்கள் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். காவல்துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரங்கள் காவலர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
#ViduthalaiPart1 Audio & Trailer launch on March 8th! ❤️🔥
An #Isaignani @ilaiyaraaja special! 🔥
➡️ https://t.co/DOj2W6h2SV#VetriMaaran @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @menongautham @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo pic.twitter.com/p0yQ661Cfd
— Sony Music South (@SonyMusicSouth) March 3, 2023
இந்நிலையில், விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.