தேனியில் டாஸ்மாக் கடை முன் முருகன் கோயில் அமைக்கப்பட உள்ளதால், அந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் காலனியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்துவோர் மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வந்தனர். இதனால் பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடைக்கு முன்பாக முருகன் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதனால் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விரைவில் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட இருப்பதால், மது அருந்துவோரின் அட்டகாசத்திலிருந்து தாங்கள் விடுதலை பெற உள்ளதாக, அப்பகுதி மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
– அனகா காளமேகன்