சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள்- குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகிய 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இதனை ஏற்றுக் கொண்டு 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ஐந்து பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.