குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தட்டிக்கேட்ட தந்தை மகன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தை படிக்கட்டில் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் விஜயகுமார், தூத்துக்குடியில் உள்ள கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மகன், அடிக்கடி குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார், இதனை கண்டித்த போது தந்தை, மகன் இருவருக்கும் இடையே இன்று தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது விஜயகுமார் தந்தையை தாக்க முற்பட்டுள்ளார். அப்போது ஆத்தியப்பன் படிக்கட்டில் தவறி விழுந்துள்ளார். அதில், அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்
இதனையடுத்து, அவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆத்தியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








