கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினமான இன்று கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள கோடநாடு காட்சி முனை பகுதியை ரசிக்க…

விடுமுறை தினமான இன்று கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள கோடநாடு காட்சி முனை பகுதியை ரசிக்க தமிழகம், கேரளா , கர்நாடகா, போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினத்தையொட்டி வருகை புரிந்தனர்.

இங்கு அமைந்துள்ள தமிழக – கர்நாடகா இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண்மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் அணை பவானிசாகர் அணையையும், கர்நாடகா குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.