நாமக்கல்லில் தேசிய திருநங்கையர் தினம் கொண்டாட்டம்!

நாமக்கல்லில், தேசிய திருநங்கைகள் தினத்தை மனநலம் பாதித்த ஆதரவற்ற மக்களுக்கு தூய்மைப்பணி ஆற்றி திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர். தேசிய திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டதை சேர்ந்த திருநங்கைகள் மாவட்ட தலைவர்…

நாமக்கல்லில், தேசிய திருநங்கைகள் தினத்தை மனநலம் பாதித்த ஆதரவற்ற மக்களுக்கு தூய்மைப்பணி ஆற்றி திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தேசிய திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டதை சேர்ந்த திருநங்கைகள் மாவட்ட தலைவர் அருணா நாயக் தலைமையில் இன்று சிறப்பாக கொண்டாடினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த விழாவில் நாமக்கல் நகர் பகுதிகளில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொட்டை அடித்தும் அவர்களை குளிக்க வைத்தும் புது துணி மாற்றியும் உணவு ஊட்டியும் மகிழ்ந்தனர்.

மேலும் திருநங்கைகள் தின விழாவை கொண்டாடும் விதத்தில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து சிறப்பாக அவர்களது
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.