தமிழகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமைச் சேர்ந்த வளர்ப்பு யானையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதையடுத்து அந்த யானையை காண அதிக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் ரகு என்னும் யானையை பராமரித்து வருகின்றனர். இதேபோல் அம்முகுட்டி என பெயர் வைத்து அதனையும் பராமரித்து வருகின்றனர். இதில் ரகு என்னும் யானை 2017ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. அந்த யானையை பொம்மனும் பெள்ளியும் பராமரித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி : பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இந்த இரண்டு யானைகள் குறித்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானையை காண தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தருகின்றனர்.