தமிழகம் செய்திகள்

சினிமா பட பாணியில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் -ஸ்ரீ பெரும்புதூரில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் அடுத்தடுது 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.இச்சம்பத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த காட்டூர் கூட்ரோடு பகுதியில் உள்ள சென்னை-அரக்கோனம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதனால் இப்பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அரக்கோனத்தில் இருந்து வந்த ஸைலோ கார் திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து காரின் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பலமாக மோதியது.இதனால் நிலைகுழைந்த ஆட்டோ எதிரே வந்து கொண்டிருந்த காரின் மீதும்,அதனை தொடர்ந்து காரின் பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனமும் அடுத்தடுத்து மோதியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சற்றும் எதிர்பாரமல் அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விபத்தில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்தது.மேலும் 5 நபர்கள் பலத்த காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவம் அறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் ‘ராவண கல்யாணம்’

EZHILARASAN D

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

Janani

புதிய கல்வி கொள்கை சாமானிய ஏழை மக்களுக்கு எதிரானது- சபாநாயகர் அப்பாவு

Web Editor