ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!

ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.   இப்பகுதிக்கு ஆந்திரா,  கர்நாடகா,  கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில்…

ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.   இப்பகுதிக்கு ஆந்திரா,  கர்நாடகா,  கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்லும் மலைப்பாதையில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதிக அளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் பெரும் விபத்து ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது.  கால்நடைகளை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.